Breaking

Post Top Ad

Your Ad Spot

ஆயிரத்தில் ஒருவன் - தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல் ஒரு பேரரசன் புலம்பல் Video | Karthi | G.V. Prakash


  • Song Name - Thaai Thindra Mannae
  • Movie - Aayirathil Oruvan
  • Singer - Vijay Yesudas, Nityashree Mahadevan & Shri Krishna
  • Music - G.V. Prakash Kumar
  • Lyrics - Vairamuthu, Veturi Sundararama Murthy
  • Director - Selvarghavan
  • Starring - Karthi, Andrea Jeremiah, Reema Sen, Parthiban








தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்ஒரு பேரரசன் புலம்பல்தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்ஒரு பேரரசன் புலம்பல்...
நெல்லாடிய நிலம் எங்கே சொல்லாடிய அவை எங்கேவில்லாடிய களம் எங்கே கல்லாடிய சிலை எங்கேதாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே...
கயல் விளையாடும் வயல்வெளி தேடிகாய்ந்து கழிந்தன் கண்கள்காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது நாசிசிலை வடிமேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதிஒட்டி உலர்ந்தது நாவும்புலிக்கொடி பொற்த்த சோழ மாந்தர்கள்எலிக்கறி பொறிப்பதுவோகாற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பது… ஓ…மண்டை ஓடுகள் மண்டிய நாட்டைமன்னன் ஆளுவதோ மன்னன் ஆளுவதோ… ஓ…
நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள்அழுகும் நாடு அழுகின்ற அரசன்பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோதூதோ முன் வினை தீதோகளங்கலும் அதிர களிருகள் பிளிரசோழம் அழைத்து போவாயோதங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்புரவிகள் போலே புரண்டிருப்போம்ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரைஅருவிகள் போலே அழுதிருப்போம்அது வரை அது வரை… ஓ…தமிழன் காணும் துயரம் கண்டுதலையை சுற்றும் கோளே அழாதேஎன்றோ ஒரு நாள் விடியும் என்றேஇரவை சுமக்கும் நாடே அழாதேநூற்றாண்டுகளும் துரவை தாங்கிஉரையில் தூங்கும் வாளே அழாதேஎந்தன் கண்ணின் கண்ணீர் கழுவஎன்னோடு அழுவும் யாழே அழாதே....
நெல்லாடிய
தாய் தின்ற மண்ணே…. 
இது பிள்ளையின் கதறல்……
  • ஒரு பேரரசன் புலம்பல்…