Breaking

Post Top Ad

Your Ad Spot

குடியரசு துணைத் தலைவர் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு வாழ்த்து: அண்ணன் கார்த்தி நன்றி.

குடியரசு துணைத் தலைவர்  ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு  வாழ்த்து: அண்ணன் கார்த்தி நன்றி.




‘கடைக்குட்டி சிங்கம்’ தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கில் ‘சின்னபாபு’ என்ற பெயரில் வெளியான இப்படத்தை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு பார்த்துவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துக்கு அண்ணன் கார்த்தி , இயக்குநர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் சூர்யா ஆகியோர் நன்றி தெரிவித்திருந்தார்கள்.


 ‘கடைக்குட்டி சிங்கம்’.
பாண்டிராஜ் இயக்கத்தில் அண்ணன் கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், விஜி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சூர்யா தயாரிப்பில் வெளியான இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார்.


 துணை குடியரசு தலைவரின் ட்வீட்டைக் குறிப்பிட்டு, “நம் நாட்டு மரபு, குடும்ப உறவுகள், விவசாயம் இவைதான் காலத்துக்கும் இந்த சமுதாயத்தை காக்கும் என்பதை போற்றும் திரைப்படமாக கடைக்குட்டி சிங்கம் அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டி பாராட்டிய உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்திருக்கிறார் அண்ணன் கார்த்தி.