Breaking

Post Top Ad

Your Ad Spot

ரிலீஸ்க்கு முன்பே பல கோடி லாபமாம். தேவ்



கடந்தாண்டு வெளியான படங்களில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழ்நாட்டில் ஏபிசி என மூன்று சென்டர்களிலும் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக வசூலை வாரி குவித்தது.

அதன் காரணமாக தற்போது கார்த்தி நடித்து வரும் தேவ் படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கிராக்கி ஏற்பட்டது. தேவ் படத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்க பலரும் போட்டிபோட்டனர். 

அவர்களில், முரளி சினி ஆர்ட்ஸ் ஹெச்.முரளி என்ற விநியோகஸ்தர் 15 கோடியே 50 லட்சத்துக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி இருக்கிறார். பிரிண்ட் செலவையும் சேர்த்தால் 17 கோடி. தற்போது இதை ஏரியா வாரியாக பிரித்து விநியோகம் செய்யும் வேலைகள் நடக்கின்றன. 

தேவ் படம் பற்றி கூடுதல் தகவல்... ரிலீஸ்க்கு முன்பே இந்தப்படத்தை தயாரித்த பட நிறுவனத்துக்கு பல கோடி லாபமாம். ஏரியா விற்பனை, digital,satilite,  என அனைத்து தளங்களிலும் நல்ல விலைக்கு போய் உள்ளதாக கூறப்படுகிறது.