Breaking

Post Top Ad

Your Ad Spot

கதாநாயகி இல்லாமல் அண்ணன் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படம்

நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது


அண்ணன் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் பல சாதனை படைத்தது  அதன்பின், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் ‘தேவ்’ என்கிற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்.   



“தேவ்”. இதுவரை கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக சேஸிங் காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்த படம் பிப்ரவரி மாதம்  14 காதலர் தினத்திற்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். 

நடிகர் சூர்யா நடிக்கும் “NGK” படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் கார்த்தியின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளது இதனை , மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்ணன் கார்த்திக் நடிக்கவுள்ளார். திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை எனக்கூறப்படுகிறது. 


ஹீரோயின் இல்லாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு தமிழ் படம் வருவதும், அண்ணன் கார்த்தி முதல் முறை கதாநாயகி இல்லாமல் நடிக்கும் முதல் படமும் இதுவாகத்தான் இருக்கும்

இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் , ஒரே கட்டமாக படத்தை முடித்துவிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அண்ணன் கார்த்திக் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.