Breaking

Post Top Ad

Your Ad Spot

கேரளா ,ஆந்திரா அரசுகளை போல் கிளைபோசேட் பூச்சிக்கொல்லிக்கு தடை விதிக்கக்கோரி அண்ணன் கார்த்தி வேண்டுகோள்


கிளைபோசேட் பூச்சிக்கொல்லிக்கு தடை விதிக்க வேண்டும் என அண்ணன் கார்த்தி தமிழக அரசுக்கு வேண்டுகோள் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்தார்



மான்சாண்டோ என்ற ரசாயண தயாரிப்பு நிறுவனத்தின் glyphosate   பூச்சுக்கொல்லி பாதுகாப்புத்தன்மை அற்றது எனவும், அதனால் புற்றுநோய் ஏற்படுவதாக குற்றச்சாட்டு பரவலாக நிலவி வருகிறது.



இந்தியாவின் பெரும்பாலான விவாசாய நிலங்களில் இந்த glyphosate பூச்சுக்கொல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்காவில் நடந்த வழக்கு ஒன்றில், பாதிக்கப்பட்டவருக்கு மான்சாண்டோ நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்     கிளைபோசேட்பூச்சிக்கொல்லிக்கு கலிபோர்னியா நீதிமன்றம் தடை விதித்தது.

தங்களது பூச்சிக்கொல்லி தயாரிப்புகள் ஆபத்தானவை என தெரிந்தும் இது குறித்து மான்சாண்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க தவறிவிட்டதாக கலிபோர்னியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.





இதனால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகக் கூறி ஆந்திர அரசும் இந்த பூச்சுக் கொல்லியை தடை செய்துவிட்டது. இதனை அடுத்து கேரளா மாநில அரசும் இந்த கிளைபோசேட் பூச்சிக்கொல்லிக்கு தடை விதித்தது

இந்த விவராகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அண்ணன் கார்த்தி கடந்த வருடம் கூறினார்  இந்த நிலையில் கேரளா அரசும் இப்போது தடை விதித்தது