Breaking

Post Top Ad

Your Ad Spot

கார்த்தி அண்ணன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பது யார்????




அண்ணன் கார்த்தி நடிப்பில்  காதலர் தினத்தில் ரிலீஸான படம் ‘தேவ்’. அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று திரையரங்கில் வெற்றி நடை இடுகிறது



 சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அண்ணன் கார்த்தி.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்து வருகின்றனர்.

 விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.

இந்த படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

1 comment: